/உள்ளூர் செய்திகள்/சென்னை/புளியந்தோப்பில் ரவுடி வெட்டிப் படுகொலை: பெண் உட்பட 10 பேருக்கு போலீஸ் வலைபுளியந்தோப்பில் ரவுடி வெட்டிப் படுகொலை: பெண் உட்பட 10 பேருக்கு போலீஸ் வலை
புளியந்தோப்பில் ரவுடி வெட்டிப் படுகொலை: பெண் உட்பட 10 பேருக்கு போலீஸ் வலை
புளியந்தோப்பில் ரவுடி வெட்டிப் படுகொலை: பெண் உட்பட 10 பேருக்கு போலீஸ் வலை
புளியந்தோப்பில் ரவுடி வெட்டிப் படுகொலை: பெண் உட்பட 10 பேருக்கு போலீஸ் வலை
புளியந்தோப்பு: முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட பிரச்னையால் புளியந்தோப்பில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கன்னிகாபுரத்தில் இருவரும் குடித்தனம் நடத்திவந்தனர். அதேபகுதியை சேர்ந்தவர் கண்ணகி(45); லாரி உரிமையாளர். இவரது மகன்கள் ராஜேஷ், சம்பத், ரகு. தங்களது லாரியை ராஜுவின் வீட்டு அருகே கண்ணகியின் மகன்கள் பார்க்கிங் செய்து வந்துள்ளனர். இதனால் ராஜு மற்றும் கண்ணகி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஸ்டெல்லாவின் சகோதரர்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடுவதால் லாரியை அங்கு நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ராஜுவிற்கும், கண்ணகிக்கும் இடையேயான முன்விரோதம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஸ்டெல்லா மற்றும் ராஜு வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல், ராஜுவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது.
இது குறித்து தகவல் அறிந்ததும் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ராஜுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக கண்ணகி மற்றும் அவரது மகன்களை போலீசார் தேடினர். அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். இக்கொலை தொடர்பாக கண்ணகி உள்ளிட்ட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை பிடித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.